பதிவு செய்த நாள்
21
மே
2021
01:05
கோவை: கோவை ஒண்டிப்புதுாரிலுள்ள காமாட்சிபுரி ஆதீனம் 51வது சக்திபீடத்தில், கொரோனா தேவி சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. அந்த சிலைக்கு 48 நாட்கள் மகாயாகம், தொடர்ந்து நடந்து வருகிறது. இது குறித்து, காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் கூறியதாவது:கொரோனா வைரஸ் கிருமியால், மனித வாழ்க்கை சீர்குலைந்து விட்டது. அம்மை, காலரா, பிளேக் போன்ற நோய் ஏற்பட்டபோது, மக்கள் பலர் உயிரிழந்தனர்.திக்கற்றவர்களுக்கு தெய்வமே துணை என்ற முன்னோர் வாக்கிற்கேற்ப, கருங்கல்லில் கொரோனா தேவி சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. அச்சிலை, ஆதீனத்தின் வளாகத்திலேயே பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.அன்றாடம் அபிஷேகமும், ஆராதனைகளும் நடைபெற்று வருகின்றன. தொடர்ந்து மகா யாகம் நடை பெறும். கொரோனா தேவிக்கு, அன்றாடம் சிறப்பு வழிபாடுகளும் நடைபெற்று வருகிறது.வசதி இருப்பவர்கள், இல்லாதவர்களுக்கு கொடுத்துஉதவ வேண்டிய காலம் இது. அதனால் தேவையிருப்பவர்களுக்கு அனைவரும் மனமுவந்து உதவ முன் வரவேண்டும்.இவ்வாறு, காமாட்சிபுரிஆதீனம் கூறினார்.