துாத்துக்குடி: திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நேற்று வைகாசி திருவிழா நடக்கவில்லை. இதனால் கோயில் வளாகம், கடற்கரை வெறிச்சோடி காணப்பட்டது.
திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயில் வைகாசி விசாக திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்வார்கள். கொரோனா பாதிப்பினால் நேற்று விழா நடக்கவில்லை. பக்தர்களுக்கு அனுமதியில்லை. இதனால் கோயில் வளாகம், கடற்கரை வெறிச்சோடி காணப்பட்டன.
வழக்கம்போல் ஆகமவிதிப்படி சுவாமிக்கு பூஜைகள் நடந்தன அதிகாலை 5:00 மணிக்கு கோயில் நடைதிறக்கப்பட்டு, 5:30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 6:00 மணிக்கு உதயமாத்தாண்ட அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது. காலை 9:00 மணிக்கு மூலவருக்கு உச்சிகால அபிஷேகமும், சண்முகருக்கு சிறப்பு அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது. தொடர்ந்து மற்ற கால பூஜைகள் வழக்கம்போல் நடந்தது. கடந்த ஆண்டும் கொரோனா பாதிப்பால் வைகாசி விசாக விழா நடக்கவில்லை.