பதிவு செய்த நாள்
26
மே
2021
12:05
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட கோயில்களில் வைகாசி விசாகத்தையொட்டி பக்தர்கள் இன்றி சிறப்பு பூஜைகள் நடந்தது.
வைகாசி விசாகத்தை முன்னிட்டு, திண்டுக்கல் அபிராமியம்மன், கந்தக்கோட்டம் முருகன், ரயிலடி சித்தி விநாயகர், என்.ஜி.ஓ., காலனி முருகன் கோயிலில் சுவாமிக்கு சிறப்பு அபிேஷகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. அர்ச்சகர்கள், கோயில் அலுவலர்கள் பங்கேற்றனர். கொரோனா ஊரடங்கால் பக்தர்களுக்கு அனுமதியில்லை. பக்தர்கள் வீடுகளில் வழிபாடு நடத்தினர்.பழநி: கொரோனா பரவலால் இந்த ஆண்டும் பழநி முருகன் கோயிலில் வைகாசி விசாகம் விழா நடக்கவில்லை. முருக பக்தர்கள் வீட்டிலேயே சுவாமியை வழிபட்டனர். அடிவாரம், திருஆவினங்குடி பகுதிகளில் வசிப்பவர்கள் சிலர் கோயில் வாயிலின் நின்று தரிசனம் செய்தனர்.
பழநி அருகே பாப்பன்பட்டி ஐவர்மலை குழந்தை வேலப்பர் கோயிலில் வைகாசி விசாக சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜை நடைபெற்றது.கன்னிவாடி: தோணிமலை முருகன் கோயிலில், சிறப்பு பூஜைகள் நடந்தது. சந்தனம், பால், பன்னீர் உள்ளிட்ட திரவிய அபிஷேகம் நடந்தது. விசேஷ மலர் அலங்காரத்துடன், சிறப்பு பூஜைகள் நடந்தது.
கன்னிவாடி சோமலிங்க சுவாமி கோயில், கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயில், சின்னாளபட்டி சதுர்முக முருகன் கோயிலில், வைகாசி விசாகம் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது.