சுத்தத்தின் மூலம், சொர்க்கத்தை அடையும் வழியை நாயகம் சொல்கிறார். ‘‘பரிசுத்த எண்ணத்தின் காரணமாக எத்தனையோ சிறிய நன்மைகள் பெரிய நன்மைகள் ஆகிவிடுகின்றன. பரிசுத்த எண்ணமில்லாத காரணத்தால் பெரிய நன்மைகள் அற்பக் காரியங்களாகி விடுகின்றன. எனவே நீங்களும் சுத்தமானவர்களாக இருங்கள். ஏனென்றால் சுத்தமுடையவனே சுவர்க்கத்தில் நுழைவான். அல்லாஹ் பரிசுத்தமானவன். பரிசுத்தத்தையே விரும்புகிறான். எனவே உங்கள் வீட்டையும், மனதையும் சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள். அப்போது உங்களுக்கு சொர்க்கம் கிடைக்கும்’’ என்கிறார். எனவே நாமும் சுத்தமாக இருப்போம்.