‘மற்ற குழந்தைகளை விட எனது குழந்தை எப்போதும் சிறந்தவனாக இருக்க வேண்டும். அதற்காக எந்த தியாகத்தையும் செய்யத்தயார்’ என்ற மனநிலைதான் பெரும்பாலான பெற்றோரிடம் இருக்கிறது. வயதான காலத்தில் குழந்தைகள் நம்மை கவனிப்பார்கள் என்ற நம்பிக்கையும், எதிர்பார்ப்பும் பெற்றோரிடம் இருக்கிறது. ஆனால் குழந்தைகளோ வளர்ந்தபின்னர் பெற்றோரை மதிப்பதில்லை. இப்படி வயதில் மூத்தவர்களை அவமதிக்கவோ, அவர்களது மரியாதை கொடுக்காமலோ இருத்தல் கூடாது. அவர்களை தவறாகவோ, மரியாதைக் குறைவாகவோ பேசக்கூடாது. முதுமையடைந்தவரை கண்ணியத்துடன் நடத்தவேண்டும். இவ்வாறு நடத்துவது இறைவனையே கண்ணியப்படுத்தியது போலாகும். ஒருவன் முதியவருக்கு மரியாதை செலுத்தினால், அவனது வயோதிக காலத்தில் மரியாதை செலுத்த, இறைவன் இப்போதே ஒருவனை தயார் செய்துவிடுவான். எனவே பெரியவர்களுக்கு மதிப்பு கொடுப்போம்.