உலகமே பணத்தின் பின்னால் சுற்றிக் கொண்டிருக்கிறது. சிலர் பணம் பெறுவதற்காக சமூக விரோத செயல்களில் ஈடுபடுகிறார்கள். பணத்தை சம்பாதிக்க வேண்டிய விதிமுறைகள் பற்றி நாயகம் சொல்வதைக் கேளுங்கள். தனித்து வாழும் ஒருவரால் பணத்தை சேர்ப்பது கடினம். எனவே ‘‘ஒருவர் செல்வந்தராக வேண்டும் என விரும்பினால், ஆயுள் நீளமாக வேண்டும் என விரும்பினால் அவர் உறவினரோடு சேர்ந்து வாழ வேண்டும்’’ என்கிறார். ‘‘பொருட்செல்வம் வைத்திருப்பவர் அதே நினைவில் சீரழிந்து போகிறார். தன் காலம் முழுவதையும் பொருள் தேடுவதிலேயே செலவு செய்பவரையும், சம்பாதித்த பொருளில் சிறிது கூட செலவு செய்யாதவரையும் இறைவன் விலக்கி விடுவான்’’ என்றும் எச்சரிக்கிறார். ‘‘பொருட் செல்வத்தை சம்பாதிப்பதை விட, ஆன்மிகச் செல்வத்தை சம்பாதிப்பதே சிறந்தது’’ என்றும் சொல்கிறார். இதுவே செல்வந்தராகும் ரகசியமாகும்.