புதுச்சேரி: கருவடிக்குப்பம் குரு சித்தானந்தா சுவாமிகளின் 184 வது வது குருபூஜை விழா சிறப்பாக நடைபெற்றது.
புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலை, கருவடிக்குப்பத்தில் உள்ள குரு சித்தானந்த சுவாமி கோவிலில் 184 வது குரு பூஜை விழா, இன்று 29ம் தேதி நடைபெற்றது. நேற்று கணபதி ஹோமத்துடன் யாக சாலை பூஜைகள் துவங்கியது. கொரோனா ஊரடங்கு காரணமாக சிவாச்சாரியார்கள் மட்டும் பூஜைகளை செய்தனர். இன்று 29ம் தேதி, மகா அபிஷேகம், கலசாபிஷேகம் நடைபெற்றது. விழாவில் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கோயில் ஊழியர்கள் சமூக இடைவெளி விட்டு பூஜையில் கலந்து கொண்டனர். கொரோனா கட்டுப்பாடு ஊரடங்கால் பக்தர்கள் இன்றி விழா நடைபெற்றது.