பதிவு செய்த நாள்
29
மே
2021
04:05
சேலம்: சாய்பாபா கோவிலில், ஓம் சாய் நமோ நமஹ எனக்கூறி, சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் தரிசனம் செய்தார். நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் தொகுதியில், தி.மு.க., சார்பில் வெற்றி பெற்றவர், சுற்றுலாத் துறை அமைச்சர் மதிவேந்தன். இவர் நேற்று மதியம், 12:20 மணிக்கு, சேலம் மாவட்டம், மல்லுார், தனியார் மருத்துவமனை வளாகத்தில் உள்ள சாய்பாபா கோவிலுக்கு வந்தார்.தான் எம்.எல்.ஏ.,வாக வெற்றி பெற்றதற்கான சான்றிதழை, சாய்பாபா சிலையில் வைத்து தரிசனம் செய்தார். தொடர்ந்து, ஓம் சாய் நமோ நமஹ; ஸ்ரீசாய் நமோ நமஹ; ஜெயஜெய சாய் நமோ நமஹ; சத்குரு சாய் நமோ நமஹ என மந்திரங்கள் உச்சரித்து, வழிபாடு நடத்தினார். 12:50 மணிக்கு, நாமக்கல் புறப்பட்டார்.