விநாயகர் கோயில்களில் சங்கடஹர சதுர்த்தி சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30மே 2021 04:05
திருவாடானை : சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் கோயில்களில் சிறப்பு பூஜை நடந்தது.திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் விநாயகர் சன்னதி, பஸ்ஸ்டாண்ட் ஆதிரெத்தினகணபதி, பாரதிநகர் கற்பகவிநாயகர், தொண்டி இரட்டைபிள்ளையார், தாலுகா அலுவலக அதிர்ஷ்ட விநாயகர் கோயில்களில் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு அபிேஷகம், பூஜை, தீபாராதனை நடந்தது.* மாரியூர் பூவேந்தியநாதர் கோயிலில் உள்ள கன்னிமூல கணபதி சன்னதியில் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. மூலவருக்கு பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 11 வகையான அபிஷேக ஆராதனை நிறைவேற்றப்பட்டது. பக்தர்கள் யாரும் பூஜையில் பங்கேற்கவில்லை.