காஞ்சி காமகோடி சங்கர மடத்தில் ஸ்ரீவிஜயேந்திரர் ஜெயந்தி விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
31மே 2021 03:05
மதுரை: மதுரை பெசன்ட் ரோட்டில் உள்ள காஞ்சி காமகோடி சங்கர மடத்தில் ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் நட்சத்திரத்தை முன்னிட்டு உலக நன்மை கருதி கணபதி ஹோமம், ஆவஹந்தி ஹோமம், ஆயுஷ்ய ஹோமம், ம்ருத்யஞ்ஜய ஹோமம், சந்த்ரமவுளீஸ்வர ஸ்வாமிக்கு அபிஷேகம், அலங்காரம், பூஜை , தீபாராதனை நடைபெற்றது. பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. மாலை 6:00 மணிக்கு ஹரிபக்த சமாஜம் சார்பில் முகநூல் வாயிலாக பக்தி இன்னிசை நடைபெற்றது. ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் மாதாந்திர நட்சத்திர ஹோமங்கள் நாளை நடக்கின்றன. நாளை மாலை 6:30 மணிக்கு ஜூம் செயலி வாயிலாக சிவயோகாநந்தாவின் சொற்பொழிவு நடை பெறும்.