Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திசைகளின் அதிபதி காய்ச்சலை குணமாக்கும் தீர்த்தம்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
திருமணத்தடையை அகற்றும் கூடல்மாணிக்கம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 ஜூன்
2021
06:06

ஜாதகத்தில் உள்ள தோஷங்களினால் திருமணம் நடக்கவில்லையா... கேரளாவிலுள்ள திருச்சூர் அருகே இரிஞ்ஞாலக்குடாவில் ராமனின் சகோதரனான பரதன் கோயிலுக்கு வாருங்கள்.  
விஷ்ணு பக்தரான வக்கே கைமள் என்பவர் கிராமத்தலைவராக இருந்தார். ஒருநாள் அவரது கனவில் இந்திரலோக தேவர் தோன்றினார். மலபார் கடற்கரையில் குறிப்பிட்ட இடத்தில் சுவாமி சிலைகள் இருப்பதாக தெரிவித்தார். அவர் சொன்ன இடத்தில் தோண்டியபோது சூரியனின் ஒளிக்கதிர்கள் பட்டு ஜொலித்தபடி நான்கு சிலைகள் கிடைத்தன. ராம சகோதரர்களான அச்சிலைகள், துவாபர யுகத்தில் பகவான் கிருஷ்ணரால் பூஜை செய்யப்பட்டவை. துவாரகை நகரம் கடலில் மூழ்கிய போது இச்சிலைகள் கடலில் அடித்து வரப்பட்டது. இதில் ராமருக்கு திர்பிறையாறு, பரதருக்கு இரிஞ்ஞாலக்குடா, லட்சுமணருக்கு மொழிக்குளம், சத்ருக்கனருக்கு பாயம்மால் ஆகிய இடங்களில் கோயில்கள் கட்டப்பட்டன. 15 கி.மீ., சுற்றளவில் உள்ள இக்கோயில்களை ‘ராமாயண மாதம்’ என்னும் ஆடியில் தரிசித்தால் கோடி புண்ணியம் உண்டாகும்.  
பதினான்கு ஆண்டு வனவாசம் முடித்து அயோத்தி திரும்பிய ராமரைக் கண்டதும், பரதன் அடைந்த மகிழ்ச்சியை இரிஞ்ஞாலக்குடாவில் சுவாமியின் முகத்தில் காணலாம். ‘கூடல்மாணிக்கப்பெருமாள்’ என்று இவருக்கு பெயருண்டு. பல நுாற்றாண்டுக்கு முன் இங்கு திருப்பணி செய்த போது, சுவாமியின் நெற்றியில் அபூர்வ ஒளி தோன்றியது. பார்ப்பதற்கு மாணிக்க கல்லின் ஒளி போல இருந்தது. காயங்குளம் மன்னரிடம் இருந்த மாணிக்கக் கல்லை, இந்த ஒளியுடன் ஒப்பிட்ட போது, இரண்டும் ஒன்றாக இருப்பதைக் கண்டனர். திடீரென்று அவர் கையில் இருந்த மாணிக்க கல் சுவாமியின் நெற்றிக்குள் மறைந்து விட்டது. அன்றுமுதல் சுவாமிக்கு மாணிக்கம் என்ற பெயர் ஏற்பட்டது. கோயில் உள்ள பகுதி கூடல் என்பதால் ‘கூடல்மாணிக்கப்பெருமாள்’ என்ற பெயர் நிலைத்துவிட்டது. சுவாமிக்கு வாசனை திரவியம் சாத்துவது கிடையாது. தாமரை, துளசி, தெச்சிப்பூக்களே வழிபாட்டுக்கு பயன்படுத்தப்படுகிறது.
இங்குள்ள குளம் ‘குலிபினி தீர்த்தம்’ எனப்படுகிறது. மீன்கள் மட்டுமே உள்ள தீர்த்தத்தில் பக்தர்கள் பொரியிட்டு வேண்டிக்கொள்கின்றனர். இதற்கு ‘மீனுாட்டு’ என்று பெயர்.
திருமணம் தடையின்றி நடக்க 101 தாமரை பூக்களை மாலையாகத் தொடுத்து சுவாமிக்கு அணிவிக்கின்றனர். சுவாமிக்கு கத்தரிக்காய் நைவேத்யம் செய்தால் வயிற்று கோளாறுகள் தீரும்.
எப்படி செல்வது : திருச்சூரில் இருந்து 23 கி.மீ.,
விசேஷ நாள் : சித்திரை பிரம்மோற்ஸவம், ஸ்ரீராம நவமி, வைகுண்ட ஏகாதசி

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
temple news
தமிழ் மாதப்பிறப்பு, திருவோணம், ஏகாதசி நாளில் படிப்பது ... மேலும்
 
temple news
உங்கள் உழைப்பை கொடுங்கள். அதுவே ... மேலும்
 
temple news
புறப்படும் முன் செவ்வாய்க்கு அதிபதியான முருகப்பெருமானை ... மேலும்
 
temple news
வடக்கும், கிழக்கும் இணையும் இடம் ஈசான்ய மூலை. இதுவே ... மேலும்
 
temple news
உங்கள் நட்சத்திரத்தில் இருந்து 1, 5, 9, 11வது நட்சத்திரம் வரும் நாளில் செயலைத் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar