Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருமணத்தடையை அகற்றும் ... எல்லா நாளும் முகூர்த்த நாளே!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
காய்ச்சலை குணமாக்கும் தீர்த்தம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 ஜூன்
2021
06:06

காய்ச்சல், தலைவலியால் அவதிப்படுகிறீர்களா... புதுச்சேரி வரதராஜப்பெருமாள் கோயிலுக்கு வாருங்கள். உங்களது பிரச்னை  தீர்ந்துவிடும்.
ஒரு காலத்தில் அரசமரங்கள் சூழ்ந்த காடான இங்கு, அத்தி மரத்தால் ஆன நரசிம்மர் சிலையை பிரதிஷ்டை செய்து  வழிபட்டனர். பிற்காலத்தில் கோயிலை விரிவுபடுத்தும் போது, கருவறையில் வரதராஜப் பெருமாளை பிரதிஷ்டை செய்தனர். இதன்பின் நரசிம்மருக்கு பிரகாரத்தில் சன்னதி கட்டப்பட்டது.  
ஐந்தடி உயரமுள்ள மூலவர் வரதராஜர் சிலை பூமியைத் தோண்டும் போது கிடைத்ததாகும். அதன் பின் கோயிலுக்கு அருகிலுள்ள வைந்திக்குப்பம் என்னுமிடத்தில் புதையுண்டு கிடைத்த ராமர், சீதா, லட்சுமணன், அனுமன், கிருஷ்ணன், சந்தானகோபாலன் சிலைகளும் பிரதிஷ்டை செய்யப்பட்டன. கடலுார் அழகானந்த முதலியாரின் நிலத்தை தோண்டும் போது, 800 ஆண்டுகள் பழமை மிக்க சுந்தர ஆஞ்சநேயர் சிலை கிடைத்தது. இவருக்கும் சன்னதி இங்குள்ளது.
புதுச்சேரி நகரை பிரெஞ்சுப்படையினர் தாக்கிய போது, புதுச்சேரி வேதபுரீஸ்வரர் கோயில் சிலைகள் இத்தலத்தில் மறைத்து வைக்கப்பட்டதாக ஆனந்தரங்கம் பிள்ளை தன் நாட்குறிப்பில் கூறியுள்ளார். முஸ்லிம் படையெடுப்பின் போது ஏராளமான விக்கிரகங்கள் இக்கோயிலுக்குள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது.
இங்குள்ள கண்ணாடி அறையில் 108 திவ்ய தேசங்களிலும் உள்ள பெருமாளின் சுதை வடிவங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
குழந்தை பாக்கியம் வேண்டுவோர், சொத்து தகராறு உள்ளவர்கள் இங்கு வழிபடுகின்றனர். பிரச்னைகளால் பிரிந்திருக்கும் தம்பதிகள் இங்கு வந்து வேண்டினால் மனஸ்தாபங்கள் நீங்கி இருவரும் ஒன்றிணைவார்கள்.
தமிழ் மாதம் பன்னிரண்டையும் குறிக்கும் விதத்தில் 12 கிணறுகள் உள்ளன. இந்த தண்ணீர் பச்சை நிறமாக காணப்படுகிறது. இதற்கு காரணம் ‘அப்ரகாம்’ என்னும் கந்தக அமிலம் கலந்துள்ளது. காய்ச்சல், தலைவலியை குணப்படுத்தும் சக்தி இதற்குண்டு.
எப்படி செல்வது : புதுச்சேரி பேருந்து நிலையத்தில் இருந்து 2 கி.மீ.,

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

இப்லீஸ் அக்டோபர் 21,2026

நெருப்பில் படைக்கப்பட்ட ஜின் வகையைச் சேர்ந்தவன் இப்லீஸ். இவன் முதல் மனிதனான ஆதம் பூமிக்கு வரும் ... மேலும்
 

யாரும் இல்லை அக்டோபர் 21,2026

‘இறைவனுக்கு இணை யாரும் இல்லை’.  அதாவது ஒன்றுக்கு மேற்பட்ட இறைவன் இருப்பதாகவும், அவர்களுக்கு ஆற்றல் ... மேலும்
 

நீங்கள் நல்லவர் அக்டோபர் 21,2026

* நோயாளியை சந்திக்க செல்லும் போது, ‘நீங்கள் நல்லவர். சொர்க்கத்தில் வீட்டை சம்பாதித்து விட்டீர்கள்’ ... மேலும்
 

நம்பாதே... யோசி அக்டோபர் 21,2026

இரக்க குணம் கொண்டவன் மெக்கானிக் ஆஷிக்.  ஒருநாள் இரவு கடையை பூட்டும் போது முகத்தில் காயத்துடன் ஒரு ... மேலும்
 

நல்ல பழக்கம் அக்டோபர் 21,2026

லண்டன் கிங்ஸ்டன் பல்கலைக்கழகம் ஆய்வு ஒன்றை நடத்தியது. அதில், ‘புத்தகம் படிப்பது அல்லது  பொழுது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar