மண்டைக்காடு கோயில் தீ விபத்து: எலியால் ஏற்பட்ட கிலி?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03ஜூன் 2021 12:06
மண்டைக்காடு: மண்டைக்காடு கோயிலில் நேற்று காலை அம்மனுக்கு பூஜைகள் நடத்திய மேல்சாந்தி வினீஷ் கூறியதாவது:– கோயிலில் காலை பூஜைகள் முடிந்து நான் மடப்பள்ளிக்கு சென்றிருந்தேன். சிறிது நேரத்தில் கோயிலிக்கு வெளியே இருந்து சப்தம் கேட்டது. நான் வெளியே வந்து பார்த்த போது பக்தர்கள் கோயில் கருவறை கூரையில் இருந்து புகை வருவதாக கூச்சலிட்டனர். உடனடியாக நான் கோயிலில் இருந்த தண்ணீர் மற்றும் பன்னீர் ஊற்றி தீயை அணைக்க முயற்சி செய்தேன். ஆனால் கோயிலில் அம்மனின் வலது புற சுற்றுப்பிரகார மரச்சட்டத்தில் இருந்து தீ மளமளவென எரிந்து கொண்டிருந்தது. உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது . தீபாராதனைக்கு பின் வைக்கப்பட்டிருந்த தீபாராதனை தட்டில் இருந்து தீ பிடிக்க வாய்ப்பில்லை. எலி, அணில் போன்றவை விளக்கில் ஏற்றப்பட்டிருந்த தீபத்தை இழுத்து செல்லும் போது மரச்சட்டத்தில் பட்டு தீ பற்றியிருக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.