மணவாளக்குறிச்சி, பிரசித்தி மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் நேற்று காலை ஏற்பட்ட தீ விபத்தில் கருவறை எரிந்து நாசமானது. கொரோனா ஊரடங்கால் பக்தர்கள் அனுமதிக்கப்படாமல் வழக்கமான பூஜைகளை மட்டும் நடந்து வருகின்றன . நேற்று காலை 6.30 மணிக்கு பூஜை நடந்தது. அதன் பின்னர், குருக்கள் ஓய்வறைக்கு சென்றார். பின்னர் 7 மணிக்கு கோயில் கருவறையில் இருந்து புகை வந்தது. சற்று நேரத்தில் ஓடால் வேயப்பட்ட கருவறை மேற்கூரையில் மரக்கட்டைகளில் தீப்பிடித்து பற்றி எரிந்தது. இதனை பக்தர் ஒருவர் பார்த்து உடனடியாக குளச்சல் தீயணைப்பு நிலையத்திற்கும், கோயிலில் இருந்தவர்களுக்கும் தகவல் தெரிவித்தார். குளச்சல் தீயணைப்பு நிலைய அலுவலர் ஜூவன்ஸ் தலைமையிலான வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். பக்தர்கள் உதவியுடன் சுமார் ஒரு மணி த்திற்கு மேல் போராடி தீ அணைக்கப்பட்டது .
இதைத்தொடர்ந்து மாலை 5 மணிக்கு கோயிலில் பரிகார பூஜைகள் நடத்தப்பட்டன. கோயில் தந்திரி சங்கர நாராயணன் மற்றும் குருக்கள் பரிகார பூஜை நடத்தினர். பின் வழக்கமான பூஜைகள் நடந்தன. போலீசாரின் முதற்கட்ட விசாணையில் தீபாராதனை தட்டில் இருந்த தீபத்தில் இருந்து எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என ரியவந்துள்ளது. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர் . மண்டைக்காடு கோயில் கருவறை தீ பிடித்து எரிந்த வம் குமரி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.