பதிவு செய்த நாள்
04
ஜூன்
2021
06:06
திருப்பூர்:திருப்பூர் மாவட்ட சேவாபாரதி மற்றும் ப்ரேரணா அமைப்பு சார்பில், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஹோமியோபதி மருந்து அறிமுக நிகழ்ச்சி, வாலிபாளையத்தில் உள்ள ஹார்வி குமாரசாமி மண்டபத்தில் நேற்று நடந்தது.சேவாபாரதி மாவட்ட தலைவர் விஜயகுமார் தலைமை வகித்தார் திருப்பூர் கோட்ட ஆர்.எஸ்.எஸ்., இணை செயலாளர் மோகனசுந்தரம் முன்னிலை வகித்தார்.ஹோமியோபதி மருத்துவர் கார்த்திக்பாபு பேசியதாவது:உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும்போது, இதுபோன்ற தொற்று உடலில் எளிதாக பாதிப்புகளை ஏற்படுத்திவிடுகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஹோமியோபதி மருத்துவத்தில், மாத்திரைகள் தயாரிக்கப்பட்டுள்ளன.நோய் தொற்று இல்லாதவர்கள், தொற்று ஏற்பட்டு தனிமைப்படுத்துதலில் உள்ளோர்; தடுப்பூசி செலுத்திக்கொண்டோர், கர்ப்பிணிகள், ஒரு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள், இந்த மாத்திரையை சாப்பிடலாம். காலை வெறும் வயிற்றில் மூன்று மாத்திரைகள் வீதம், தொடர்ந்து மூன்று நாட்கள் எடுத்துக்கொள்ளவேண்டும். 15 நாட்களுக்கு பின் மீண்டும் மாத்திரை எடுத்து கொள்ளலாம். இந்த மாத்திரைகளை உட்கொள்வதால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.இவ்வாறு, அவர் பேசினார்.லகு உத்யோக் பாரதி தேசிய செயலாளர் மோகன சுந்தரம், மாத்திரைகளை வழங்கி துவக்கி வைத்தார். பா.ஜ., மாநில செயலாளர் மலர்க்கொடி, பாஸ்கரன் பெற்று கொண்டனர்.மாவட்ட சேவை பணிக்குழு பொறுப்பாளர் செந்தில்குமார் நன்றி கூறினார். மாத்திரை தேவைப்படுவோர், 94433 52026, 90037 07507 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.