பதிவு செய்த நாள்
05
ஜூன்
2021
05:06
மாமல்லபுரம் : திருவிடந்தை கோவில் மண்டபத்தில், பொதுமக்கள் கூடுவதை தடுக்க, கம்பி தடுப்பு அமைக்கப் பட்டது.
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அடுத்த திருவிடந்தையில், தொல்லியல் மற்றும் ஹிந்து சமய அறநிலைய துறைகளின் பொறுப்பில், நித்யகல்யாண பெருமாள் கோவில் உள்ளது. திருமண தோஷ பரிகார கோவிலான இங்கு, பக்தர்கள் வழிபடுகின்றனர்.கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு ஊரடங்கால், கோவிலில் தினசரி வழிபாடு நடத்தப்படுகிறது. ஆனால், பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கோவில் எதிரில், திறந்தவெளியில் உள்ள மண்டபத்தில், உள்ளூர் மக்கள், பொழுதுபோக்கிற்கு கூடுகின்றனர். இதை தடுக்க கோவில் நிர்வாகத்தினர், மண்டபத்திற்கு கம்பி தடுப்பு அமைத்தனர்.