பதிவு செய்த நாள்
06
ஜூன்
2021
11:06
வடபழநி : அன்புள்ள தினமலர் வாசகருக்கு, தினமலர் இணையதளத்தின் வாழ்த்துக்கள். தினமலர் இணையதளத்தின் பலமே உங்களைப் போன்ற வாசகர்களின் தொடர்ந்த ஆதரவு தான் என்றால் அது மிகையாகாது. நீங்கள் இந்திய பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தைக் கட்டிக் காக்க ஆற்றிவரும் சேவைகளையும், நமது நாட்டின் பெருமையை உலகறியச் செய்து வரும் பணிகளையும் தினமலர் நன்கு அறியும். இந்த நிலையில் சென்னை வடபழநி முருகன் கோயில் தக்கார் என்ற முறையில் உங்களிடம் ஒரு வேண்டுகோள் வைக்க விரும்புகிறேன்.
வடபழநி முருகன் கோவில் புகழ் பெற்ற முருகன் கோவில் என்பதை நீங்கள் அறிவீர்கள். அருள்மிகு வடபழநி ஆண்டவர் கோயிலுக்கு கும்பாபிஷேகம் செய்யத் திடடமிட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த கும்பாபிஷேகத் திருப்பணியில் நீங்கள் அனைவரும் இயன்ற அளவு பங்கேற்க வேண்டும் என்று விரும்புகிறேன். பொதுவாக கும்பாபிஷேகம் ஒரு சில பெரிய நன்கொடையாளர்கள் அல்லது தர்ம சிந்தனையாளர்கள் உதவியுடன் நடத்தப்படுவது வழக்கம். ஆனால் ஒரு சித்தரால் கட்டப்பட்ட இந்த பிரபலமான முருகன் கோயில் கும்பாபிஷேகத் திருப்பணியில் அதிக அளவிலான பக்தர்கள் ஈடுபட வேண்டுமென்று எதிர்பார்க்கிறேன்.
அடுத்த 30 ஆண்டுகளில் வரக்கூடிய பக்தர்களின் எண்ணிக்கைய கருத்தில் கொண்டு அதற்கென சில திட்டங்களும் இந்த கும்பாபிஷேகத் திருப்பணியுடன் சேர்த்து நடைமுறைப்படுத்தப்பட உள்ளன. கோயிலில் தற்போதுள்ள வியாபார நடவடிக்கைகளுக்கு முழுமையாக முற்றுப்புள்ளி வைத்து, பிரார்த்தனைக்கான இடமாக மட்டுமே கோயில் விளங்குமாறு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. பூஜைகளுக்கும் யாகங்களுக்கும் கூடுதல் முக்கியத்துவம் கொடுத்து, முழுமையான ஆன்மிகத் தலமாக மாற்ற இருக்கிறோம். அரசியல்வாதிகளுக்கோ, முக்கிய பிரமுகர்களுக்கோ முன்னுரிமையோ முக்கியத்துவமோ தரப்படமாட்டாது, ஒரு சில நன்கொடையாளர்களோ, அறநிலையத்துறை அதிகாரிகளோ அல்லது ஒரு சில நபர்களோ சொலவது போல் செயல்படாமல், பக்தர்களுக்கே உரிய ஒரு முன்மாதிரி கோயிலாக மாற்ற இருக்கிறோம். ஒவ்வொரு பக்தரும் இதைத் தங்கள் கோயில் என்று கருதும் சூழ்நிலை உருவாக்கப்படும். அந்த காலத்தில் கிராமங்களில் கோயில்களில் எந்த அளவு உரிமையாக சென்று வந்தோமோ அத்தகைய நிலை இந்த கோயிலில் ஏற்படுத்தப்படும். எனவே கோயிலின் வளர்ச்சிக்காக தாராளமாக நிதி வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன். கும்பாபிஷேக செலவுக்கு போக மீதம் இருக்கும் நிதி, கோயிலின் நலனுக்காக, இந்திய பாரம்பரியத்தைப் பரப்புவதற்காக செலவிடப்படும். நீங்கள் அனுப்பும் நிதிக்கு எவ்வித ஒளிவு மறைவு இல்லாமல் கணக்கு பரமரிக்கப்படும் என்று உறுதி கூறுகிறேன்.
உலக நலனுக்காக முருகப் பெருமானைப் பிரார்த்திப்போமாக.
லோக சமாஸ்தா
சுகினோ பவந்து - ஆதிமூலம், தக்கார், வடபழநி கோயில், சென்னை. (தினமலர் இயக்குநர்; கோவை தினமலர் வெளியீட்டாளர்)
தாங்கள் நன்கொடை அனுப்ப வேண்டிய வங்கி கணக்கு விவரம்:
Name: Arulmigu Vadapalani Andavar Temple Tirupani A/c
A/c No: 0934101045493
IFSC Code: CNRB0000934
Bank: Canara Bank
Branch: Vadapalani
இமெயில் முகவரி: vpmurugantemple@gmail.com