Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோவில் வாசலில் தி.மு.க.,வினர் ... இன்று நோய் நீக்கும்.. பழநி நவபாஷாண சிலை வடித்த போகர் சித்தர் குருபூஜை இன்று நோய் நீக்கும்.. பழநி நவபாஷாண ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வடபழநி கோயில் சொத்துக்கள் மீட்பு; பல ஆண்டு பிரச்னைக்கு தீர்வு
எழுத்தின் அளவு:
வடபழநி கோயில் சொத்துக்கள் மீட்பு; பல ஆண்டு பிரச்னைக்கு தீர்வு

பதிவு செய்த நாள்

07 ஜூன்
2021
12:06

சென்னை: வடபழநி முருகன் கோயில் சொத்துக்கள் தனியாரிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளன. ரூ.300 கோடி மதிப்பிலான சொத்துக்கள் மீட்கப்பட்டன. பல ஆண்டுகால பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டிருப்பது பக்தர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. முதல்வர் ஸ்டாலினின் அதிரடி உத்தரவால் தூங்கி கொண்டிருந்த அதிகாரிகள் சுறுசுறுப்பு அடைந்துள்ளனர். திமுக ஆட்சி அமைந்த ஒரு மாத காலத்தில் முதன் முறையாக சென்னை வடபழநி கோயில் சொத்துக்கள் மீட்க முடிவு செய்யப்பட்டது.

தமிழகம் முழுவதும் பல்வேறு இந்து கோயில்களின் சொத்துக்கள் சில அந்தஸ்து பெற்ற நபர்களிடம் சிக்கி தவிக்கிறது. எந்த ஆட்சி வந்தாலும் அதி தீவிர நடவடிக்கை எடுப்பதில் தயக்கம் காட்டுகின்றனர். அரசியல் பிரமுகர்கள் தலையீடு இருக்கும். கோயில் நிலம் மீட்பது தொடர்பாக கோயில் ஊழியர்கள், நிர்வாகத்தினர், பக்தர்கள் கடும் முயற்சி மேற்கொண்டனர். அடுக்கடுக்கான புகார்கள் அனுப்பினர். நிர்வாக காரணம் சொல்லி ஆளும் கட்சியினர் சிலரிடம் கூட்டு சேர்ந்து எவ்வித நடவடிக்கையும் இல்லை.

ஏன் இந்த நடவடிக்கை இப்போது ?

பல ஆண்டுகளாக கோயில் சொத்துக்கள் ஆக்கிரமிப்பு தொடர்பாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதனை கவனமாக கேட்ட முதல்வர் ஸ்டாலின் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் சேகர் பாபுவுக்கு அதிரடி உத்தரவிட்டார். இதனையடுத்து அமைச்சர்கள், அதிகாரிகள் களம் இறங்கினர். இது போல் இன்னும் தமிழகம் முழுவதும் இந்து சமய அறநிலைய துறையினர் தொடர் நடவடிக்கையில் இறங்கவுள்ளனர். இந்துக்கள் மத்தியில் நல்லதொரு பெயரை ஏற்படுத்தும் விதமாக முதல்வர் கடுமையான உத்தரவின் பேரில் இந்த கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு ஆக்கிரமிப்பு மீட்பு மற்றும் சீரமைப்புகள் நடைபெற துவங்கி இருக்கிறது. அதன் முதல்படியாக தமிழகம் முழுவதும் கோயில் சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளன.

" இது டிரெய்லர் தான் இனி தான் மெயின் பிக்சர் "

முதல்வர் ஸ்டாலின் உத்தரவின்படி இந்து சமய அறநிலைய துறை அமைச்சர் சேகர்பாபு களம் இறங்கினார். இது தொடர்பாக அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் கூறுகையில்; தனியார் சம்பாதிப்பதை கொள்ளையடிப்பதை அனுமதிக்க முடியாது. இதனை தடுக்க காவல் துறை, மாநகராட்சி, அறநிலைய துறை இணைந்து இன்று வடபழநி கோயில் நிலங்களை மீட்டுள்ளோம். சாலிகிராமம், பகுதிகளில் வணிக நிறுவனங்கள், வாகன காப்பகங்கள், மற்றும் குடோன்கள் என பலரது வசமிருந்த சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளது. சென்னை வடபழநி கோயிலுக்கு சொந்தமான 5.5 ஏக்கள் நிலம் மதிப்பு ரூ.300 கோடி ஆகும். இது டிரெய்லர் தான் இனி தான் மெயின் பிக்சர் பார்ப்பீர்கள். மேலும் அனைத்து கோயில்களிலும் தமிழில் அர்ச்சனை செய்வது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அமைச்சர் சேகர்பாபு கூறினார்.

பக்தர்கள் வேண்டுகோள்: இது போன்ற ஆக்கிரமிப்புக்கு துணை போகும் அதிகாரிகளை கண்டறிந்து இந்து சமய அறநிலைய துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர். வட பழநி கோயிலுக்கு சொந்தமான இந்த இடம் 10 ஆண்டுகளாக தொடர்ந்து ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் இருந்து வந்தன. கோயில் தொடர்பாக அறநிலைய துறையிடம் கேட்டபோது நிர்வாக ரீதியாக காரணம் கூறி எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்து வந்தனர். கடந்த ஆளும் கட்சி ஆட்களின் பிடியில் இருந்தததால் இவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிகிறது. இது போல் இனியும் நடக்காமல் இருக்க இந்த ஆக்கிரமிப்புக்கு காரணம் யார் என அறிந்து தற்போதைய அமைச்சரும், கமிஷனர் குமரகுருபரனும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் . இல்லையென்றால் இதுபோல் ஆக்கிரமிப்புகள் தொடர்ந்து வண்ணம் இருக்கும்.

இபிஎஸ் நடவடிக்கை எடுப்பாரா ?: ஆக்கிரமிப்புக்கு துணைபோன அதிமுக.,வினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற குரலும் எழுந்துள்ளது. வடபழநி கோயில் சொத்துக்கள் தொடர்பாக ஆக்கிரமிப்புக்கு காரணமாக இருந்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்எல்ஏ.,வாக இருந்தாலும் கட்சியை விட்டு நீக்க வேண்டும். இப்படிப்பட்ட ஆட்களின் செயல்களால் தான் ஆட்சியை இழந்தோம் என உணர வேண்டும். கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி , பன்னீர்செல்வம் நடவடிக்கை எடுப்பார்களா என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி  ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா பகல் பத்து மூன்றாம் நாளான இன்று  நம்பெருமாள் சவுரிகொண்டை ... மேலும்
 
temple news
கோவை: கோவை ராம் நகர் கோதண்ட ராமசாமி கோவிலில் மகா ருத்ர யக்ஞம் நிகழ்ச்சி நடந்தது. இதில் முதல் நிகழ்வாக ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் மலைமேல் அனைத்து தரப்பினரும் செல்ல 20 நாட்களுக்குப் பின்பு ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; ஸ்ரீமடத்தில் இன்று காலை மகராயண புண்ய காலத்தை முன்னிட்டு சூரிய பூஜை நடைபெற்றது. காஞ்சி ... மேலும்
 
temple news
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில், மார்கழி ஆருத்ரா தரிசன விழா வரும், 25 ம் தேதி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar