பதிவு செய்த நாள்
18
ஜூன்
2012
10:06
மோகனூர்: அசலதீபேஸ்வரர் கோவிலில் நடந்த சனிப்பிரதோஷ விழாவில், சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, ஸ்வாமியை வழிபட்டுச் சென்றனர். மோகனூர் காவிரி ஆற்றின் கரையில், பிரசித்தி பெற்ற அசலதீபேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு, ஸ்வாமி மதுகரவேணி அம்பாளுடன் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இக்கோவிலில், ஒவ்வொரு மாதமும் பிரதோஷம் வெகுவிமரிசையாக நடப்பது வழக்கம். நேற்று முன்தினம், சனிப்பிரதோஷத்தையொட்டி, மாலை 4.30 மணிக்கு கோவில் வளாகத்தில் உள்ள நந்திக்கு, பால், தயிர், பன்னீர், தேன், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகம் செய்யப்பட்டது. அதை தொடர்ந்து, அசலதீபேஸ்வரர் ஸ்வாமி சிறப்பு அலங்காரத்தில், பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.