பதிவு செய்த நாள்
10
மார்
2026
11:03
மேற்கு மாம்பலம்: –: காமாட்சி மண்டலி அறக்கட்டளை சார்பில், 108 நாள் ‘சத்ரு சம்ஹார சுப்பிரமணிய திரிஸதி ஹோமம்’ மேற்கு மாம்பலம் சங்கர மடத்தில் உள்ள, காமாட்சி அம்மன் கோவிலில் நேற்று துவங்கியது.
வரும் ஜூன் 24ம் தேதி வரை, தினமும் மாலை 4:00 மணி முதல் இரவு 8:30 வரை, ஹோமம் நடக்க உள்ளது. இதில், மாலை 4:00 முதல் 6:00 வரை, ஸ்ரீகந்தசஷ்டி கவசம் மற்றும் ஸ்ரீலலிதா சஹஸ்ரநாம பாராயணம் நடைபெற உள்ளது. இதன் துவக்க விழாவில், பா.ஜ., முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பேசியதாவது: ஹிந்து பாரம்பரியத்தில், 108 என்ற எண்ணிற்கு தனி மதிப்பு உள்ளது. பூமிக்கும் நிலாவிற்கும் இருக்கும் துாரம், நிலவின் விட்டத்தை, 108ல் பெருக்கினால் கி டைக்கும். அதேபோல், சூரியனுடைய விட்டத்தை, 108ல் பெருக்கினால், சூரியனுக்கும் பூமிக்குமான துாரம் கிடைக்கும். இதை, நம் முன்னோர் தங்கள் சூட்சுமத்தால் கண்டறிந்துள்ளனர். அறிவியல் எப் போதும் சூட்சும அறிவின் பின்னால் தான் வரும். இவ்வாறு அவர் பேசினார். தமிழக விஷ்வ ஹிந்து பரிஷத் தலைவரும், ‘தினமலர்’ நாளிதழ் திருச்சி,- வேலுார் பதிப்புகளின் வெளியீட்டாளருமான ஆர் ஆர்.கோபால்ஜி பேசுகையில், ‘‘ஹிந்து தர்மம் சுயநல புத்தியாகவே மாறி விட்டது; நம் சுயநலத்திற்காக தான், நாம் பிரார்த்தனை செய்கிறோம். ‘‘பிரார்த்தனை செய்யும்போது, தேசத்திற்காகவும், ஹிந்து தர்மத்திற்காகவும் பிரார்த்தனை செய்ய வேண்டும். இந்த ஹோமம் முடியும்போது, நீங்கள் எதிர்பார்க்கிற மாற்றம் வரும்,’’ என்றார்.