குன்னூர்: குன்னூர் புனித அந்தோணியார் ஆலயத்தின் 126வது ஆண்டு விழா கோலாகலத்துடன் நடந்தது. குன்னூர் புனித அந்தோணியார் ஆலயத்தின் 126வது ஆண்டு விழா நேற்று நடந்தது. நேற்று காலை திருநாள் சிறப்பு திருப்பலி ஊட்டி மறை மாவட்ட ஆயர் அமல்ராஜ் தலைமையில் நடந்தது. திருப்பலி ஆங்கிலம், தமிழ் மற்றும் மலையாளத்தில் நடந்தது. மதியம் அன்பின் விருந்தும், மாலை திருத்தேர் பவனி நடந்தது. தேர்பவனி மவுண்ட் ரோடு, பஸ் ஸ்டாண்ட் வழியாக தேவாலயம் வந்தடைந்தது.குன்னூர் வாகன பழுது பார்ப்போர் சங்கம், ஆட்டோ ஓட்டுனர் சங்கம், சுற்றுலா வாகனம் ஓட்டுனர் சங்கம் மற்றும் இந்து, முஸ்லிம், கிறிஸ்துவர் நலச்சங்கத்தினர் சார்பில் ஆங்காங்கே அந்தோணியார் "சொரூபங்கள் வைக்கப்பட்டிருந்தன. இரவு வாண வேடிக்கை நடந்தது. விழாவுக்கான ஏற்பாடுகளை ஜோசப், ஜெரோம் உட்பட பங்கு மக்கள் செய்திருந்தனர்.