திருச்சி: ஸ்ரீரங்கம் ஹிந்து சமய மன்றம் சார்பில், 35வது ஆண்டு சமஷ்டி உபநயன விழா சிறப்பாக நிறைவடைந்தது. ஸ்ரீரங்கம் வடக்குச்சித்திரை வீதி ஹிந்து சமய மன்றம் சார்பில், 35வது ஆண்டு சமஷ்டி உபநயன விழா, கடந்த ஒன்பதாம் தேதி மாலை உதகசாந்தி நிகழ்ச்சியுடன் துவங்கியது. மா லை திருவிளக்கு பூø ஜ நடந்தது. மறுநாள் அதிகாலை கணபதி ஹோமமும், பூர்ணாஹூதியும் நடந்தது. முக்கிய நிகழ்வான உபநயன ப்ரம்மோபதேச முகூர்த்தம் 18 வடுக்களுக்கு செய்விக்கப்பட்டது. தொட ர்ந்து மஹா சுதர்ஸன ஹோமம், பூர்ணாஹூதி நடந்தது. மாலையில் ப்ரம்மோபதேச வடுக்களுடன் நாம சங்கீர்த்தனம் நான்கு சித்திரை வீதிகளில் வலம் வந்து கொள்ளிடத்தில் பாலிகை கரைக்கப்பட்டது. உபநயனம் செய்துக்கொண்ட வடுக்களுக்கு சந்தியாவந்தன புத்தகம், நோட்டு மற்றும் பேனாக்கள் வழங்கப்பட்டது. ஸ்ரீர ங்கம் ஹிந்து மன்றம் இதுவரை 1,268 வடு க்களுக்கு உபநயனமும், 48 தம்பதிகளுக் கு திருமணம் செய்து வைத்துள்ளது.