ஒரு பெண் எங்கு, யாரிடம் பேசினாலும் யாரையாவது குறை சொல்லிக் கொண்டே இருப்பாள். அவளால் பல குடும்பங்களில் பிரிவினை, பிரச்னை உண்டானது. ஒருநாள் சபை போதகர் அவளை அழைத்து, சந்தைக்குப் போய் முழு கோழியை வாங்கி, வரும் வழியில் அதன் இறகுகளை உருவி கீழே போட்டுக் கொண்டே வரும்படி சொன்னார். அவளும் அப்படியே செய்தாள். மீண்டும் போதகர் அவளிடம், வந்த வழியே திரும்பிச் சென்று இறகுகளை எடுத்து வரும்படி கூறினார். அவளோ, ‘‘ஐயா.. எல்லாம் காற்றில் பறந்து போயிருக்குமே. எப்படி எடுக்க முடியும்’’ என்றாள். ‘‘இப்போது புரிகிறதா.. நீ பேசுகிற வார்த்தைகளும் இதைப்போலத்தான். மறுபடியும் பெற முடியாது. அவை காட்டுத்தீயைப் போல பரவி, சம்பந்தப்பட்டவர்களிடம் பிரச்னையை உண்டாக்குகிறது. அதை மீண்டும் சரி செய்ய உன்னால் முடியாது’’ என்று அறிவுரை சொல்லி அனுப்பினார். பலர் தன்னுடைய நாவின் மூலமாகவே பிரச்னைகளில் அகப்பட்டு, துன்பத்தைச் சந்திக்கின்றனர். சிறிய உறுப்பாகிய நாக்கு, பெரிய உறவுகளையே பாதிக்க வைக்கும் ஆற்றல் உடையது. எனவே பிறரிடம் பேசும்போது நல்லதையே பேசுவோம். .