மண்டைக்காடு பகவதியம்மன் கோயிலில் ஜூன் 14ல் தேவபிரசன்னம்: ஜோதிடர் தேர்வு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12ஜூன் 2021 04:06
மணவாளக்குறிச்சி: மண்டைக்காடு பகவதியம்மன் கோயிலில் ஏற்பட்ட தீ விபத்தையடுத்து வரும் திங்கட்கிழமை தேவபிரசன்னம் பார்க்கப்படுகிறது. இதற்காக ஜோதிடர் மற்றும் போற்றிகள் 3 பேர் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டனர். பிரசித்திப்பெற்ற மண்டைக்காடு பகவதியம்மன் திருக்கோயிலில் கடந்த 2ம் தேதி ஏற்பட்ட தீ விபத்தில் கருவறை மேற்கூரை எரிந்து சேதமானது. இந்த சம்பவம் பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து கோயிலில் இரும்பிலான தற்காலிக மே ற்கூரை அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. தற்காலிக கூரை அமைக்கும் பணிகள் இன்றுடன் நிறைவு பெறுகிறது. இந்நிலையில் பக்தர்களின் வேண்டுகோளை ஏற்று கோயிலில் தேவபிரசன்னம் பார்ப்பதற்கு குமரி மாவட்ட அறநிலையத்துறை சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. தேவ பிரசன்னம் பார்ப்பதற்கு கேரளாவைச் சேர்ந்த 5 ஜோதிடர்கள், 5 போற்றிகள் என 10 பேருக்கு கோயில் நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது. இந்த 10 பே ரின் பெயர்களும் நேற்று அம்மன் சன்னதி முன்பு எழுதி குலுக்கி போடப்பட்டது. மண்டைக்காடு பகுதியைச் சேர்ந்த கனீஷா (7) என்ற சிறுமி தேர்வு செய்தார். இதில் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த ஜோதிடர் கமலாசனன் நாயர் தேர்வு செய்யப்பட்டார். இவருக்கு உதவியாக திருவனந்தபுரம் குன்னத்துக்காலை சேர்ந்த அகில் போ ற்றி, உதயங்குளம் கரையை சேர்ந்த பிரஜேஸ் போற்றி ஆகிய 3 பேரும் தேர்வு செய்யப்பட்டனர். இந்த 3 பேருமே தேவபிரசன்னம் பார்ப்பார்கள். தேவ பிரசன்னம் வரும் திங்கட்கிழமை (14ம் தேதி) பார்க்க அதிக வாய்ப்பு உள்ளது என கோயில் வட்டாரம் தெ ரிவித்துள்ளது. தேவபிரசன்னத்தில் எடுக்கப்படும் முடிவின் அடிப்படையில் பரிகார பூஜைகள் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.