பதிவு செய்த நாள்
12
ஜூன்
2021
05:06
கோவை: கவுமார மடாலயம், ராமானந்த அடிகள் கல்வி அறக்கட்டளை சார்பில், கோவை சுற்றுப்பகுதியில் உள்ள கிராமக்கோவில் அர்ச்சகர்கள், பூசாரிகள் 100 பேருக்கும், தனியார் பள்ளி ஆசிரியர்கள் 60 பேருக்கும், தவில் நாதஸ்வர இசைக்கலைஞர்கள் 40 பேருக்கும் என, 200 பேருக்கு ஒரு மாதத்துக்கு தேவையான அரிசி, தலா, 1,000 ரூபாய் மதிப்புள்ள மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.இத்துடன், மடாலய திருக்கோவில் அர்ச்சகர்கள் 5 பேருக்கு, 4,000 ரூபாய் உதவித்தொகையுடன் அரிசி மற்றும் மளிகை பொருட்களை, சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள் மடாலய அன்பர்களிடம் வழங்கினார்.அவர்கள், பயனாளிகளின் வீடுகளுக்குச் சென்று வழங்கினர். நோய் நீக்கும் பாடல்கள் அடங்கிய, 10 ஆயிரம் புத்தகங்கள், சிரவை ஆதீனம் சார்பில் அச்சிடப்பட்டு, தமிழகம் முழுவதும், 300 பேருக்கு அனுப்பப்பட்டு, பொதுமக்களுக்கு இலவசமாக கொடுக்கப்பட்டது.