கமலமுனி வைகாசி மாதம் பூசம் நட்சத்திரத்தில் அவதரித்தார். இவர் வாழ்ந்த காலம் 4000 ஆண்டுகள் 48 நாள் ஆகும். இவர் போகரிடம் சீடனாய் சேர்ந்து யோகம் பயின்று, சித்தர் கூட்டத்துள் ஒருவராய்ப் புகழ்ப் பெற்றார். “கமலமுனி முந்நூறு” என்னும் மருத்துவ நூல், ரேகை சாஸ்திரம் முதலிய நூல்களை இவர் செய்துள்ளதாகத் தெரிகின்றது.
கமலமுனி காப்பு காப்பானகருவூரார் போகநாதர் கருணையுள்ள அகத்தீசர் சட்டைநாதர் முப்பான கொங்கணரும் பிரம்ம சித்தர் முக்கியமாய் மச்சமுனி நந்திதேவர் கோப்பான கோரக்கர் பதஞ்சலியார் கூர்மையுள்ள இடைக்காடர் சண்டிகேசர் வாப்பான வாதத்திற்கு ஆதியான வாசமுனி கமலமுனி காப்புதானே (இந்த காப்பு பாடலை நாள்தோறும் அதிகாலை எழுந்தவுடன் தியானம் செய்யவும். ஆபத்து, விபத்துக்கள் இன்றி வாழவும் உதவும் மந்திரம் இது)