விசாகம் 4ம் பாதம்: வாழ்க்கையில் உயர்ந்த லட்சியத்துடன் இருக்கும் விசாக நக்ஷத்ர அன்பர்களே இந்த மாதம் பணவரத்து எதிர்பார்த்ததை போல இருக்கும். எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். மற்றவர்களிடம் உங்கள் கருத்துக்களை கூறும்போது அவர்கள் தவறாக அதை புரிந்து கொள்ளலாம். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டி அகலும். எதிர்பார்த்த அளவு வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். கூட்டு தொழில், வியாபாரம் செய்பவர்கள் கவனமாக இருப்பது நன்மை தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலை சந்திக்க நேரும். மேல் அதிகாரிகள் கூறுவதை கேட்டு அதன்படி நடப்பது நல்லது. சக ஊழியர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். குடும்பத்தில் இருந்து வந்த கருத்து வேற்றுமை நீங்கும். கணவன், மனைவியிடையே மனஸ்தாபங்கள் அகலும். பிள்ளைகளிடம் அன்புடன் பேசுவது நன்மை தரும். பெண்களுக்கு விவேகமாக செயல்படுவது வெற்றியை தரும். கலைத்துறையினருக்கு எதிர்பாலினத்தவரிடம் பழகும்போது கவனம் தேவை. அரசியல்துறையினருக்கு நினைக்கும் காரியங்கள் தள்ளிபோகலாம். மாணவர்களுக்கு ஆசிரியர்கள் கூறுவதை கவனமாக கேட்டு அதன்படி நடப்பது வெற்றிக்கு உதவும். சந்திராஷ்டமம்: ஜூலை 07, 08 அதிர்ஷ்ட தினம்: ஜூன் 21, 22
வணங்க வேண்டிய தெய்வம்: குல தெய்வத்தை வணங்க சொன்ன சொல்லை காப்பாற்ற முடியும்
அனுஷம்: எந்த விவகாரத்திலும் தங்களின் அறிவுத்திறனால் வெற்றி பெறும் அனுஷ நக்ஷத்ர அன்பர்களே இந்த மாதம் பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்து சேரலாம். சாதூர்யமான பேச்சின் மூலம் காரிய வெற்றி கிடைக்கும். திடீர் உடல்நலக் கோளாறு ஏற்படும். தொழில் வியாபாரத்தில் இருந்த முட்டு கட்டைகள் நீங்கும். பணவரத்து திருப்தி தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடினமாக உழைக்க வேண்டி இருக்கும். அதன் மூலம் நல்ல பலன்கள் கிடைக்க பெறுவீர்கள். உத்தியோகம் தொடர்பான இடமாற்றம் ஏற்படலாம். குடும்பத்தில் இருப்பவர்கள் வீண் வாக்குவாதங்களில் ஈடுபடலாம். கணவன், மனைவிக்கிடையே ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. குழந்தைகளின் முன்னேற்றத்தில் அக்கறை காட்டுவீர்கள். பெண்களுக்கு பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். கலைத்துறையினருக்கு நண்பர்கள், உறவினர்களிடம் பக்குவமாக பேசுவது நன்மை தரும். அரசியல்துறையினருக்கு வெற்றி பெற கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். மாணவர்களுக்கு: மற்றவர்களை திருப்தியடையச் செய்யும் வகையில் உங்களது செயல்கள் இருக்கும். கல்வியில் ஆர்வம் உண்டாகும். சந்திராஷ்டமம்: ஜூலை 08, 09 அதிர்ஷ்ட தினம்: ஜூன் 22, 23
வணங்க வேண்டிய தெய்வம்: கருமாரியம்மனை மனமுருக பிரார்த்தித்தால் முயற்சிகள் வெற்றி அடையும்
கேட்டை: காரியம் சாதிக்க பலவகையான யோசனைகளையும் தந்திரங்களையும் கையாள்வதில் கெட்டிக்காரர்களான கேட்டை நக்ஷத்ர அன்பர்களே இந்த மாதம் முக்கிய நபர்களின் உதவி கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். விடா முயற்சியுடன் ஈடுபட்டு காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். விருப்பங்கள் கைகூடும். அடுத்தவரை அதிகாரம் செய்யும் போது கவனம் தேவை. மற்றவர்களுக்காக பொறுப்புகளை ஏற்காமல் இருப்பது நல்லது. தொழில் வியாபாரம் முன்னேற்ற பாதையில் செல்லும் அரசாங்கம் தொடர்பான பணிகளில் சாதகமான போக்கு காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பொறுப்புகள் கூடும். திறமை வெளிப்படும். வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்து சேருவார்கள். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். விருந்தினர்கள் வருகை இருக்கும். மரியாதையும் அந்தஸ்தும் கூடும். பெண்களுக்கு பணவரத்து திருப்திதரும். கலைத்துறையினருக்கு வாக்கு வன்மையால் எல்லா நன்மைகளும் கிடைக்க பெறுவீர்கள். அரசியல்துறையினருக்கு நிதி நிலைமை சீர்படும்.மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடைகள் நீங்கும். சந்திராஷ்டமம்: ஜூலை 09, 10 அதிர்ஷ்ட தினம்: ஜூன் 23, 24
வணங்க வேண்டிய தெய்வம்: பைரவரை துதிக்க குடும்பத்தில் இருந்து வந்த குழப்பம் அகலும்
மேலும்
ஆனி ராசி பலன் (15.6.2025 முதல் 16.7.2025 வரை) »