மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஆனி ஊஞ்சல் உற்சவம் நேற்று தொடங்கியது. விழாவில் நூறுகால் மண்டபத்தில் அம்மன், பிரியாவிடையுடன் சுந்தரேஸ்வரர் அருள்பாலித்தனர். கொரோனா ஊரடங்கால் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட வில்லை. கோயில் வளாகத்திற்குள் பக்தர்களின்றி விழா நடத்தப்பட்டு வருகிறது.