பதிவு செய்த நாள்
18
ஜூன்
2021
11:06
வீரபாண்டி: மக்கள் சுபிட்சமாக இருக்க, கந்தசாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது. சேலம் - நாமக்கல் மாவட்ட எல்லை, காளிப்பட்டி கந்தசாமி கோவிலில், ஆனி மாத வளர்பிறை சஷ்டியான நேற்று, மூலவர் கந்தசாமிக்கு பால், தயிர், தேன், சந்தனம் உள்பட, 16 வகை மங்கல பொருட்களால் சிறப்பு அபி?ஷகம் செய்யப்பட்டது. அதேபோல் வள்ளி, தெய்வானை சமேத உற்சவர் கந்தசாமிக்கும் அபி?ஷகம் நடத்தப்பட்டது. மூலவர் ராஜ அலங்காரத்தில் அருள்பாலித்தார். தொடர்ந்து, வள்ளி, தெய்வானை சமேத கந்தசாமி வெள்ளி கவசத்தில் சர்வ அலங்காரத்தில் அருள்பாலித்தார். நாட்டில் கொரோனா ஒழிந்து, மக்கள் அனைவரும் சுபிட்சமாக இருக்க பூஜை செய்யப்பட்டது. பக்தர்கள் அனுமதிக்கப்படாமல், கோவில் அர்ச்சகர்கள், பணியாளர்கள் மட்டும் பங்கேற்றனர்.