* இப்போது இருக்கும் நிலைக்கு நீ மட்டுமே பொறுப்பு. எனவே விரைந்து நற்செயலில் ஈடுபடு. * தோல்வியை கண்டு மனம் தளர வேண்டாம். கீழே விழுந்தாலும் திரும்ப எழுந்து லட்சியத்தைப் பிடித்துக் கொள். * சமுதாயத்தின் வீழ்ச்சிக்கு மதம் காரணமல்ல. மதத்தை முறையாக கையாளாமல் போனதும் காரணம். * பொறாமையை மட்டும் போக்கினால் மகத்தான செயல்களை செய்ய முடியும். * சுயநலம் இல்லாமல் நிறைந்த அன்புடன் பழகுபவர்களே உலகிற்கு தேவை. * உனக்குத் தேவையான எல்லா வலிமையும், உதவியும் உனக்குள்ளேயே உள்ளன. * உடலையும் மனதையும் பலவீனப்படுத்தும் எதையும் அணுகுவது கூடாது. * உன்னை நீயே பலவீனன் என நினைப்பது உனக்குச் செய்யும் பெரிய பாவம். * மனதை உயர்ந்த லட்சியங்களால் நிரப்பு. அதிலிருந்து நற்செயல்கள் விளையும். * எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய். வலிமை உடையவன் என நினைத்தால் வலிமை படைத்தவன் ஆவாய். * சோம்பேறித்தனம் எந்த வழியில் வந்தாலும் அதை விரட்டியடி. * தோல்வியை மட்டுமே சந்தித்தவன் இதயம் இரும்பை விட வலிமையானது. * வாழ்வில் பட்ட துன்பத்தை விட அதில் பெற்ற அனுபவத்திற்கு முக்கியத்துவம் கொடு. * உண்மைக்காக எதையும் துறக்கலாம்; ஆனால் எதற்காகவும் உண்மையைத் துறக்காதே. * கீழ்ப்படியக் கற்றுக் கொண்டால் கட்டளையிடும் பதவி தானாக கிடைக்கும்.