ராமலிங்க பிரதிஷ்டை விழா: ராமேஸ்வரம் கோயிலில் நிறைவு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21ஜூன் 2021 09:06
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் நேற்றுடன் ராமலிங்க பிரதிஷ்டை விழா நிறைவு பெற்றது.
ராமாயணம் வரலாற்றில் தொடர்புடைய ராமேஸ்வரம் திருக்கோயிலின் தல வரலாறு குறித்து பக்தர்களுக்கு விளக்கும் வகையில், கோயிலில் ஜூன் 18, 19ல் ராமலிங்க பிரதிஷ்டை விழா நடந்தது. நிறைவு விழாவான நேற்று, ராமருக்கு பிரம்மஹத்தி தோஷம் நீங்கிட சீதை, ராமேஸ்வரம் கடற்கரை மணலில் உருவாக்கிய சிவலிங்கத்தை தரிசித்தனர் அப்போது தான் கொண்டுவந்த சிவலிங்கத்திற்கு பூஜை செய்யாததை கண்டு சினம் கொண்ட அனுமான், சீதை உருவாக்கிய சிவலிங்கத்தை தன் வாலில் கட்டி இழுத்த போது, வால் அறுந்து விடுகிறது. இதன்பின் அனுமான் கொண்டு வந்த லிங்கத்திற்கும் முதலில் பூஜை செய்ததாக ராமாயண வரலாற்றில் கூறப்படுகிறது. இதனை நினைவு கூறும் விதமாக நேற்று கோயிலுக்குள் குருக்கள் ஒருவர், அனுமான் வேடமிட்டு பக்தி பரவசத்துடன் ஆடி வந்தார். இதன்பின் சிவலிங்கத்திற்கு மகா தீபாராதனை செய்து விழா நிறைவு பெற்றது.