பதிவு செய்த நாள்
21
ஜூன்
2021
11:06
சேலம்: கொரோனா நீங்கி, மக்கள் நலமுடன் வாழ, மகா தன்வந்திரி யாகம் நடந்தது. சேலம், அம்மாபேட்டை, சவுந்தரராஜ பெருமாள் கோவிலில், 108 திவ்யதேச பெருமாள், தத்ரூபமாக சுதை சிற்பங்களாக அமைத்து பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இக்கோவிலில் வலம் வந்து வழிபட்டால், 108 திவ்ய தேச பெருமாள் சுவாமிகளையும் தரிசித்த பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை. நேற்று, கொரோனாவில் இருந்து மக்கள் நலமுடன் வாழ வேண்டி, மகா தன்வந்திரி, மகா சுதர்சன யாகங்கள் நடத்தப்பட்டன. இதற்காக, புனிதநீர் நிரப்பிய ஏழு கலசங்களை வைத்து, யாகங்கள் பூர்ணாஹூதியுடன் நிறைவடைந்தது. புனிதநீரால் தன்வந்திரி பகவான் மூலவர், உற்சவர், சுதர்சன பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்யப்பட்டது. தொடர்ந்து, தன்வந்திரி, சுதர்சன பெருமாள்களுக்கு வெள்ளி கவசம் சார்த்தி, மலர் மாலைகளில் அலங்காரம் செய்து பூஜை செய்யப்பட்டது. பக்தர்கள் அனுமதியின்றி பட்டாச்சாரியார்கள், கோவில் நிர்வாகிகள் மட்டும் பங்கேற்றனர்.