மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் பிரதோஷ வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23ஜூன் 2021 10:06
மயிலாடுதுறை: மாயூரநாதர் கோயிலில் மற்றும் காவிரி துலாக்கட்டத்தில் நடைபெற்ற ஆனி மாத பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.
மயிலாடுதுறையில் அபயாம்பிகை சமேத மாயூரநாதர் கோயில் அமைந்துள்ளது. தேவார பாடல் பெற்ற இது பார்வதிதேவி மயில் உருகொண்டு சிவபெருமானை பூஜித்து வேண்டி ய வரங்களை பெற்ற தலமாக திகழ்கிறது. இத்தளத்தில் ஒவ்வொரு பிரதோஷம் அன்று நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி ஆனி மாதம் செவ்வாய் கிழமை பிரதோஷ தினமான நேற்று கோவில் கொடிமரம் அருகே உள்ள நந்தி பகவானுக்கு பால், தயிர், இளநீர் மற்றும் அபிஷேக பொடிகளை கொண் டு சிவாச்சாரியார்கள் சிறப்பு அபிஷேகத்தை நடத்தி வைத்தனர். தொடர்ந்து அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. இதுபோல மயிலாடுதுறை காவிரி துலாக் கட்டத்தில் காவிரி ஆற்றின் நடுவே வேறு எங்கும் இல்லாத வகையில் மேற்கு நோக்கி எழுந்தருளியுள்ள நந்தி பகவானுக்கு சிவாச்சாரியார்கள் தெப்பத்தில் சென்று பிரதோஷ சி றப்பு அபிஷேக, ஆராதனைகள் நடத்தி வைத்தனர். இந்த இரு பிரதோஷ வழிபாட்டு தலங்களிலும் அரசின் கொரோனா வழிகாட்டுதலை பின்பற்றி, சொற்ப எண்ணிக்கையிலான ப க்தர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி பிரதோஷ வழிபாடு நடத்தினர்.