சாஸ்திரம் சொல்றதைக் கேளுங்க! * பசிக்கும் போது மட்டுமே சாப்பிட வேண்டும். அதுவும் மிதமாகவும், சத்து மிக்கதாவும் இருக்க வேண்டும். * அளவிற்கு அதிகமாக சாப்பிட்டால் நோய் வளரும். ஆயுள் குறையும். எனவே வயிறு புடைக்கவும், மூச்சு முட்டவும் சாப்பிடாதீர்கள். * மிளகு சேர்ப்பதால் உணவிலும், உடலிலும் உள்ள விஷத்தன்மை நீங்கும். * சீரகம் சேர்ப்பதால் உடம்பு சீராகவும், குளிர்ச்சியாவும் இருக்கும். * வெந்தயத்தை நீரில் ஊற வைத்து காலை எழுந்தவுடன் தண்ணீருடன் பருகி வர உடம்பிலுள் சூடு குறையும். * கடுகு உடலில் உள்ள சூட்டை சமமாக வைத்திருக்கும். * இஞ்சி சேர்ப்பதால் பித்தம், தலைசுற்றல், வாந்தி போன்ற கோளாறுகள் ஏற்படாது. * சாப்பிடும் முன் கை, கால், வாயை நன்றாக கழுவுவது அவசியம். * காலில் உள்ள ஈரம் உலரும் முன்பாக சாப்பிடத் தொடங்க வேண்டும். * சாப்பிடும் போது பேசவோ, படிக்கவோ, கேளிக்கையில் ஈடுபடவோ கூடாது. இடதுகையை கீழே ஊன்றக் கூடாது * கதவை திறந்து வைத்தபடி வாசலுக்கு எதிரில் அமர்ந்து சாப்பிடக் கூடாது.