கோத்தகிரி: கோத்தகிரி டானிங்டன் ஸ்ரீ கருமாரியம்மன் கோவிலில் பவுர்ணமி பூஜை நடந்தது. இக்கோவிலில் பவுர்ணமி பூஜை, மாதந்தோறும் சிறப்பாக நடக்கிறது. கொரோனா நோய்த்தொற்று காரணமாக, பல மாதங்களாக பக்தர்கள் கோவிலுக்கு செல்வதை தவிர்த்து வருகின்றனர். இந்நிலையில், பவுர்ணமி நாளான நேற்று, ஸ்ரீ கருமாரியம்மன் கோவில் பூசாரி மட்டும், கோவிலை திறந்து அம்மனுக்கு அபிஷேக அலங்கார பூஜை நடத்தினார். இதேபோல, கோத்தகிரி கடை வீதியில் அமைந்துள்ள அருள்மிகு மாரியம்மன் மற்றும் பண்ணாரியம்மன் கோவில்களிலும் பவுர்ணமி பூஜை நடந்தது.