பதிவு செய்த நாள்
26
ஜூன்
2021
06:06
பழநி: பழநி மலைக்கோயில், திருஆவினன்குடி பெரியநாயகி அம்மன் கோயில், பெருவுடையார் கோயில் ஆகிய முக்கிய கோயில்களில் உலக நலன் வேண்டி சிறப்பு பூஜை நடைபெற்றது.
பழநி முக்கிய கோயில்களில் உலக நலன் வேண்டி சங்காபிஷேகம், அன்னாபிஷேகம் நடைபெற்ற சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. ஜூன் 23, மலைக்கோயில் பாரவேல் மண்டபத்தில் 108 சங்குகளுடன் சங்காபிஷேக பூஜை, சிறப்பு அலங்காரம், தீபாராதனை சித்தனாதன் சன்ஸ் சிவனேசன், தனசேகரன், பழனிவேல், செந்தில்குமார், ஆகியோர் செய்தனர். ஜூன் 24, திருவாவினன்குடி குழந்தை வேலாயுத சுவாமி கோயில், ஜூன் 25 ல் பெரிய நாயகி அம்மன் கோயிலில் அன்னாபிஷேகம் நிகழ்ச்சி கண் பற் கிராண்ட் ஹரிஹர முத்தரையர், செந்தில்குமார் ஆகியோர் செய்திருந்தனர். ஜூன் 26, பெரிய ஆவுடையார் கோவிலில் அன்னாபிஷேகம் கந்த விலாஸ் செல்லக்குமார், நவீன் விஷ்ணு, நரேஷ் குமாரன் ஆகியோர் செய்து இருந்தனர்.. கொரோனா கட்டுப்பாடுகளின் படி, அரசு வழிகாட்டு நடைமுறைப்படி பூஜைகள் நடைபெற்றன.