பதிவு செய்த நாள்
26
ஜூன்
2021
06:06
தங்கவயல்-ஆண்டர்சன்பேட்டை அசோக தம்ம துாத புத்தர் கோவில் பெங்களூரு மஹாபோதி சொசைட்டியிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டது.தங்கவயல் ஆண்டர்சன்பேட்டை, கர்நாடக மாநில அரசு போக்குவரத்து கழக டிப்போ எதிரில் அமைந்துள்ள அசோகா தம்ம துாத புத்தர் கோவில், 70 ஆண்டு பழமை வாய்ந்தது.இக்கோவிலில் தியான மண்டபம், தங்கும் விடுதி, பிக்குகள் தங்குவதற்கு விடுதிகள் உள்ளது. பல கோடி ரூபாய் மதிப்பிலான காலி நிலம் உள்ளன.இவை அனைத்தையும், பெங்களூரு மஹா போதி சொசைட்டிக்கு வழங்க, அசோகா தம்ம துாத தலைவர் டாக்டர் பூரனேஷ் ராஜ் தலைமையில் முடிவு செய்யப்பட்டது.இரண்டு மாதங்களுக்கு முன், பெங்களூரு மஹாபோதி சங்கத்தினரிடம் தெரிவிக்கப்பட்டது.இது குறித்து ஏகமனதாக வழங்குகிறீர்களா என அனைவரின் சம்மதத்தையும் மஹாபோதி நிர்வாகிகள் கேட்டறிந்தனர்.இதை தொடர்ந்து, மஹாபோதி சொசைட்டி செயலர் ஆனந்த பந்தேஜி, இருபதிற்கும் மேற்பட்ட பிக்குகள், நேற்று முன்தினம் அசோக தம்ம துாத புத்த சங்கத்திற்கு வந்தனர்.இவர்களை, அசோக தம்ம துாத தலைவர் டாக்டர் பூரனேஷ் ராஜு, ஆனந்தன், கவுதமன், பஞ்சமணி, பிரதாப் குமார், ஜெயபிரகாஷ், பிரபுராம், மீராபாய், முரளி ராஜ், மிலிந்த் ரவிச்சந்திரன் ஆகியோர் வரவேற்றனர்.நேற்று காலை, 9:30 மணிக்கு பூஜையுடன் விழா துவங்கியது. 9:45 மணிக்கு லும்பினி கெஸ்ட் ஹவுஸ் திறந்து வைக்கப்பட்டது.தொடர்ந்து பஞ்ச சீலம் ஓதினார். 10:30 மணிக்கு தியானம் நடந்தது. அசோக தம்ம துாத முழு சொத்துகளை, பெங்களூரு மஹா போதி சங்கத்துக்கு ஒப்படைக்கும் நிகழ்வு நடந்தது.கோலார் மாவட்ட உதவி கலெக்டர் சோமசேகர், ஜெய்பீம் சிவராஜ், சுடர், உட்பட பலர் பங்கேற்றனர். ஏழைகளுக்கு உணவுப்பொருட்களை வழங்கினர்.