சோழவந்தான்: சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயில் வைகாசி திருவிழா ஜூன் 14 கொடியேற்றத்துடன் துவங்கியது. 17 நாட்கள் விழாவில் தினமும் அம்மன் பக்தர்களுக்கு சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பக்தர்களுக்கு அனுமதி இல்லை, தீச்சட்டி, பால்குடம் உள்ளிட்ட விழாக்கள் ரத்தானது.நேற்று நான்குரத வீதிகளில் தேரோட்டத்திற்கு பதில் கோயில் வளாகத்திற்குள் அலங்காரத் தேரில் எழுந்தருளிய அம்மனை, வடக்கு வாயில் வழியாக பக்தர்கள் தரிசனம் செய்தனர். இன்று (ஜூன் 30) மாலை 4 மணிக்கு விழா நிறைவு சிறப்பு அபிஷேகங்கள், ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது.ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்கின்றனர்.