பதிவு செய்த நாள்
30
ஜூன்
2021
01:06
பெங்களூரு : கொரோனாவால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த திருப்பதி ஆன்மிக தரிசன சுற்றுலா, கர்நாடக சுற்றுலா மேம்பாட்டு வாரியம், இன்று முதல் மீண்டும் ஆரம்பிக்கிறது.
கர்நாடக சுற்றுலா மேம்பாட்டு வாரியம் சார்பில், திருப்பதி திருமலை வெங்கடாஜலபதி கோவில் ஆன்மிக தரிசன சுற்றுலா, கொரோனாவால், இரண்டு மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.கொரோனா பரவல் ஓரளவு குறைந்துள்ளதால், இன்று முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தினமும் திருப்பதிக்கு பஸ்கள் இயக்கப் படவுள்ளன.ஒருவருக்கு, வோல்வோ பஸ்சில், 2,200 ரூபாயும்; மல்டி ஆக்சல் வோல்வோ சொகுசு பஸ்சில், 2,300 ரூபாயும், கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதியோருக்கு, 20 சதவீத கட்டண சலுகை வழங்கப்படுகிறது. மெஜஸ்டிக், யஷ்வந்த்பூர் பஸ் நிலையங்களில் இருக்கை முன்பதிவு செய்து கொள்ளலாம். கூடுதல் தகவலுக்கு, www.kstdc.co என்ற இணையதளம் அல்லது 080 4334 4334 / 35, 89706 50070 / 75 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.