பதிவு செய்த நாள்
01
ஜூலை
2021
12:07
வேலூர்: பேர்ணாம்பட்டு அருகே, அம்மன் சிரசு திருட்டு போனது. வேலூர் மாவட்டம், பேர்ணாம்பட்டு அருகே, எம்.வி.குப்பத்தில் கெங்கையம்மன் கோவில் உள்ளது. வரும், 16ல் கெங்கையம்மன் சிரசு திருவிழா நடத்த, கிராம மக்கள் ஏற்பாடு செய்து வந்தனர். மற்றொரு பிரிவினர், இக்கோவில் தங்களுக்கு சொந்தமானது என்றும், தங்களுக்கே விழா நடத்த அனுமதி வழங்க வேண்டும் என, மேல்பட்டி போலீசில் மனு கொடுத்தனர். இதனால், விழா நடத்த யாருக்கும் போலீசார் அனுமதி வழங்கவில்லை. எனவே, கோவிலில் இருந்த கெங்கையம்மன் சிரசை கடந்த, 27ல் அருகிலுள்ள ஆதிபுரீஸ்வரர் கோவிலுக்குள் மக்கள் வைத்து விட்டனர். இந்நிலையில், அம்மன் சிரசு நேற்று முன்தினம் மாயமானது. இது குறித்து கிராம மக்கள் மற்றும் மற்றொரு பிரிவினரும் தனித்தனியாக கொடுத்த புகார்படி கோவிலில் வைத்திருந்த, சிசிடிவி கேமராவை போலீசார் நேற்று ஆய்வு செய்தனர். அதில், காரில் வந்த மர்ம நபர்கள், கோவில் சுவர் ஏறி குதித்து, அம்மன் சிரசை திருடிச்சென்றது தெரிய வந்தது. போலீசார் விசாரித்து வருகின்றனர்.