மதுரை: மதுரை, மேலமாசி வீதி இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, தலைமை குருக்கள் தர்மராஜ் சிவம் சிறப்பு பூஜை நடத்தினார்.
கொரோன வைரஸ் தொற்றால், கோவில்களில் பக்தர்கள் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. தினமும் 6 கால பூஜை நடைபெறுகிறது. இந்நிலையில், இன்று தேய்பிறை அஷ்டமி என்பதால், மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோவில், உட்புறமாக தாழிடப்பட்டு, பைரவருக்கு அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடந்தது. பக்தர்கள் இல்லாமல், நடந்த வழிபாட்டில், கண்காணிப்பாளர் கணபதி ராமன் மற்றும் கோயில் ஊழியர்கள் சமூக இடைவெளி விட்டு பூஜையில் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்தல அர்ச்சகர் தர்மராஜ் சிவம், கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.