கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் பக்தர்களை அனுமதிக்க கோரிக்கை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02ஜூலை 2021 04:07
கன்னியாகுமரி: கொரோனா தொற்று குறைந்து வருவதால் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் பக்தர்களை தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுஉள்ளது.
குமரி மாவட்டத்திலுள்ள இந்து அறநிலையதுறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள 490 திருக்கோவில்களிலும், பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இதே போல் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் வைகாசி விசாக பெருந்திருவிழா கடந்த மாதம் நடைபெறவில்லை. கடந்த 2 ஆண்டுகளாக, இந்த வைகாசி விசாக திருவிழாவையொட்டி நடக்கும் தேரோட்டம் மற்றும் தெப்பத்திருவிழாவும் கொரோனா காரணமாக நின்று போனது. தற்போது தொற்றுப்பரவல் குறைந்து வரும் நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. எனவே கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று பல்வேறு இந்து அமைப்புகள் கோரிக்கை விடுத்து உள்ளன.