* இளைஞனே.. தன்னம்பிக்கை ஒன்றே உன் பரம்பரைச் சொத்து. உன்னை சுமக்கும் பூமியும் உன் காலடியில் தான் இருக்கிறது. * தன்னம்பிக்கையும், கடவுள் நம்பிக்கையும் இணைந்தால் வாழ்வு ஒளி பெறும். * விதியை நிர்ணயிக்கும் சக்தி, அதற்கு தேவையான ஆற்றல், உறுதி அனைத்தும் உனக்குள் இருக்கிறது. * எதை நினைக்கிறாயோ அதுவாகவே மாறி விடுவாய். வலிமை கொண்டவன் என நினைத்தால் வலிமை படைத்தவனாக ஆவாய். * இந்த உலகமே பெரிய பயிற்சிக்கூடம். இங்கு நம்மை வலிமையுடையவர்களாக ஆக்கவே நாம் பிறந்திருக்கிறோம். * துருப்பிடித்து தேய்வதை விட உழைத்து தேய்வது மேலானது. * நல்ல வழியில் பணம் சம்பாதித்து சமுதாயத்திற்கு பயனுள்ள விதத்தில் செலவழிக்க வேண்டும். * பிறருடைய பாராட்டு, பழி பற்றி யோசிக்க ஆரம்பித்தால் மகத்தான செயல்களை செய்ய முடியாது. * இரக்கமுள்ள இதயம், சிந்தனை மிக்க மூளை, உழைக்க துடிக்கும் கைகள் இவையே நமக்கு தேவை. * இயற்கையை வெல்லவே நீ பிறந்திருக்கிறாய். அதற்குப் பணிந்து போவதற்கு அல்ல. * உடல், மனதை பலவீனப்படுத்தும் விஷயங்களில் ஈடுபடக்கூடாது. * சோம்பேறித்தனத்தை எப்பாடுபட்டாவது துரத்தி விடு. * எண்ணம், செயலில் குறுக்கிடும் தீமைகளுடன் போரிட்டுக் கொண்டேயிரு. * உலகிலுள்ள உயிர்கள் அனைத்தும் கடவுளின் அன்புக் குழந்தைகளே. * உயர்ந்த லட்சியம் ஏற்படுத்திக் கொள். அதை அடைய சிறப்பான வகையில் முயற்சி செய். * மற்றவர்களின் ஏளனத்தை பொருட்படுத்தாதே. கடமைகளைச் செய்வதில் கண்ணாக இரு. * மனிதனை உருவாக்குவதில் இன்பம், துன்பத்திற்கு சமமான பங்குண்டு. * சில நேரங்களில் இன்பத்தை விட துன்பமே சிறந்த ஆசிரியராக இருக்கும். * ‘என்னால் எல்லாம் முடியும்’ என முழுமையாக நம்பினால் சாதிக்கும் வலிமை பிறக்கும். * மன ஒருமைப்பாட்டுடன் பணிபுரிபவன் அழியாத புகழ் பெறுவான்.