இங்கிலாந்தைச் சேர்ந்த ஜியார்ஜ் முல்லர் என்னும் போதகர் கப்பலில் குவபெக் நகருக்கு சென்று கொண்டிருந்தார். குறிப்பிட்ட நாளில் அந்த நகரை அடைய வேண்டிய கட்டாயம் இருந்தது. ஆனால் பனி மூட்டத்தால் கப்பல் நிறுத்தப்பட்டது. ‘‘நீங்கள் கப்பலை கிளப்புங்கள். நான் சனிக்கிழமைக்குள் அங்கு இருந்தாக வேண்டும்’’ என கேப்டனிடம் தெரிவித்தார். ‘‘கடலே உறைந்து போகும் அளவு குளிர் இருக்கிறது. எனவே நீங்கள் சொல்வது சாத்தியமில்லை’’ என்றார் கேப்டன். ‘‘நான் 57 ஆண்டு காலமாக இந்த வழியில் பயணித்து கொண்டு இருக்கிறேன். ஒருபோதும் தடை வந்ததில்லை. இப்போதும் அதற்குரிய வழி உண்டாகும்.’’ என்று சொல்லி ஜெபிக்க ஆரம்பித்தார். ‘‘நேரம்தான் வீணாகும். பயன் இருக்காது’’ என்றார் கேப்டன். அதை ஏற்காமல் முல்லர் தன் பணியைத் தொடர சிறிது நேரத்தில் பனிமூட்டம் விலகியது. ‘நம்பிக்கை வீண் போகாது’.