மற்ற கிழமைகளில் இல்லாவிட்டாலும் வெள்ளிக்கிழமை, வளர்பிறை, தேய்பிறை சதுர்த்தி திதியன்று விநாயகரை வழிபட மறக்க கூடாது என்கிறார் காஞ்சி மகாபெரியவர். அப்போது நம் நினைவிற்கு வர வேண்டிய இன்னொருவர் அவ்வை பாட்டி. விநாயகர் மீது இவர் பாடிய ‘சீதக்களப செந்தாமரைப் பூம்பாதம்’ எனத் தொடங்கும் அகவல் விசேஷமானது. சங்கடஹர சதுர்த்தியன்று இதைப் பாடி விநாயகரிடம் என்ன வேண்டினாலும் இரட்டிப்பான பலன் கிடைக்கும். இதைப் பாடுவோருக்கு கவலை தீரும். மனம் ஒருமுகப்படும். நிம்மதி நிலைக்கும். நமக்கும், நாட்டுக்கும், உலகத்துக்கும் நன்மை உண்டாவதற்கு அவ்வையார் மூலம் விநாயகரைச் சரணடைவதே வழி என்கிறார் காஞ்சி மகாபெரியவர்.