மத்திய பிரதேசம் உஜ்ஜயினியில் மகாகாளேஸ்வரர் என்னும் சிவன் தெற்கு நோக்கியபடி தட்சிணாமூர்த்தி அம்சத்துடன் இருக்கிறார். இவரை வழிபட்டால் எதிர்கால வாழ்வு உயரும். உஜ்ஜயினி நகரில் விலாசன் என்னும் அந்தண பக்தர் வாழ்ந்தார். நகரையடுத்த காட்டில் துாஷணன் என்னும் வேதாளம் வசித்தது. காட்டு வழியாக பயணிப்போரை பயமுறுத்தி வந்தது. இதிலிருந்து விடுபட விலாசனிடம் மக்கள் ஆலோனை நடத்தினர். யாகம் நடத்தி வேதாளத்தை கொல்ல முடியும் என அவர் தெரிவித்தார். அதன்படி யாகம் நடத்த, முடிவில் யாக குண்டம் வெடித்து அதில் சிவலிங்கம் தோன்றியது. அதிலிருந்து மகாகாளேஸ்வரர் என்னும் பெயரில் சிவன் காட்சியளித்தார். அவரது அருட்பார்வையால் வேதாளம் சாபம் நீங்கி சொர்க்கத்தை அடைந்தது. அதன்பின் இங்கு மகாகாளேஸ்வரருக்கு கோயில் கட்டப்பட்டது. அந்நியப் படையெடுப்பின் போது அல்டுமிஷ் என்பவரால் கோயில் சூறையாடப்பட்டது. மராட்டிய ஜெனரல் ரனோஜி ஷிண்டே என்பவரால் 1734ல் தற்போதுள்ள கோயில் கட்டப்பட்டது. மாடக்கோயிலான இங்கு மூன்று அடுக்குகள் உள்ளன. முதன்மைக் கருவறை பெரிதாக வட்டவடிவில் உள்ளது. மாகாளேஸ்வரர் சிவலிங்க வடிவில் இங்கிருக்கிறார். அவருக்கு மேல் தளத்தில் ஓங்காரேஸ்வரரும், அதற்கு மேல் தளத்தில் நாக சந்திரேஸ்வரரும் உள்ளனர். கருவறையைச் சுற்றி விநாயகர், பார்வதி, கார்த்திகேயன், பைரவரும், நந்தி சன்னதிகள் உள்ளன. உள்ளனர். ஒருகாலத்தில் சண்டன், பிரசண்டன் என்னும் அசுரர்கள் இப்பகுதி மக்களை துன்புறுத்தினர். அவர்களை அழிக்கும்படி பார்வதியை அனுப்பினார் மகாகாளேஸ்வரர். ஹரனின்(சிவபெருமான்) விருப்பத்தை நிறைவேற்ற காளியாக தோன்றியதால் ‘ஹரசித்திதேவி’ எனப் பார்வதி பெயர் பெற்றாள். மன்னர் விக்ரமாதித்தனின் குலதெய்வமான இவளுக்கு தனிக்கோயில் உள்ளது. 12 ஆண்டுக்கு ஒருமுறை கும்பமேளா என்னும் புனித நீராடல் வைபவம் நடக்கும். உஜ்ஜயினி மகாகாளேஸ்வரரை ஒருமுறை தரிசித்தாலே மோட்சம் கிடைக்கும். மாணவர்கள் இவரை தரிசிக்க கல்வி வளர்ச்சி ஏற்படும். இங்கு வழிபட்டதன் பயனாக ‘மகாகவி’ என்னும் பட்டத்தை காளிதாசர் பெற்றார். புராணங்களில் இத்தலம் ‘அவந்தி’ என அழைக்கப்பட்டது. எப்படி செல்வது : மத்தியபிரதேசம் போபாலில் இருந்து 190 கி.மீ., விசேஷ நாட்கள்: நாகபஞ்சமி, மகாசிவராத்திரி, பிரதோஷம்