திருவண்ணாமலை : இரண்டு மாதங்களுக்கு பிறகு அரசு வழிகாட்டு விதிகளின்படி நாளை (ஜூலை.,5) முதல் பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். நாளை கோவில்கள் திறக்கப்பட உள்ள நிலையில், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் தங்க கொடி மரத்தை நவீன கருவி மூலம் தண்ணீரை பீச்சியடித்து சுத்தம் செய்யும் பணியில் ஊழியர் ஈடுபட்டனர். கோவிலில் பக்தர்கள் சமூக இடைவெளியுடன் சென்று சுவாமி தரிசனம் செய்ய தயார் நிலையில் ராஜாகோபுரம் அருகே இருந்து மஞ்சள் நிற வட்டம் போட்டப்பட்டுள்ளது.