பழநி: பழநி மலைக்கோயிலில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள அரசு வழிகாட்டு விதிகளின்படி நாளை(ஜூலை.,5-) முதல் பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். பழனியில் மலை கோயிலுக்கு செல்ல குடமுழுக்கு மண்டபம் வழியே படி பாதையை அடைந்து மேலே செல்ல முகக் கவசம், சமூக இடைவெளியுடன் அனுமதிக்கப்படுவர்.
சளி, காய்ச்சல் உள்ளவர்கள் அனுமதி இல்லை. மலைக்கோயிலுக்கு 10 வயது முதல் 65 வயது வரை உள்ளவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட உள்ளனர். கர்ப்பிணிக்கு அனுமதி இல்லை.ஒரு மணி நேரத்துக்கும் ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். ஒருநாள் முன்னதாக இணையம், தொலைபேசியில் பதிவு செய்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். திருக்கோயிலின் இணையதளத்தில் www.palanimurugan.hrce.tn.govல் திண்டுக்கல் மாவட்டத்தை தேர்வு செய்து இலவச, கட்டண தரிசனத்திற்கு முன்பதிவு செய்ய வேண்டும். 04545-242683 என்ற தொலைபேசி எண்ணில் காலை10.00 மணி முதல் 1 மணி வரையிலும் பகல் 2:00 மணி முதல் மாலை 6.00 மணி வரை 200 அழைப்புக்கள் பதிவு செய்யப்படும். தரிசத்திக்கு வரும் போது ஆதார் அட்டை கொண்டுவர வேண்டும்.
பஞ்சாமிர்தம், விற்பனை உண்டு அன்னதானம் பொட்டலம் பிரசாதம் உண்டு கோயில் வளாகத்தில் அமர்ந்து உண்ண அனுமதி கிடையாது. தேங்காய், பழம், பூ கொண்டு வர அனுமதி இல்லை. கால பூசை, அமர்வு தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதி இல்லை. மலைமீது செல்ல வின்ச் சேவை உண்டு. ரோப் கார் சேவை இல்லை. கோயிலில் அரசு வழிகாட்டுதல்படி முறையாக நின்று வழிபட வேண்டும். திருஆவினன்குடி கோயிலில் ஒரு வழிப்பாதையில் பக்தர்கள் முகக் கவசம், சமுக விலகலுடன் தரிசனத்திற்கு அனுமதிக்கபடுவர்.