ஆண்டிபட்டி : மாவூற்று வேலப்பர் மலைக்கோயிலில் இன்று முதல் அரசு வழிகாட்டு விதிகளின்படி பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கு அனுமதிக்கப்படுவர் என்று செயல் அலுவலர் ராமகிருஷ்ணன் தெரிவித்தார். வெளியூர்களில் இருந்து இக்கோயிலுக்கு தினமும் பக்தர்கள் வந்து செல்வர். பவுர்ணமி, அமாவாசை, மாதாந்திர கார்த்திகை நாட்களில் அதிக பக்தர்களுடன் சிறப்பு பூஜைகள் நடைபெறும். கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளால் ஏப்ரல் 25 முதல் கோயில் மூடப்பட்டது. பக்தர்கள் அனுமதி இன்றி தினமும் காலை பூஜை நடந்தது. ஊரடங்கு தளர்வுக்குப்பின் இன்று முதல் பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர். முக கவசம், சமூக இடைவெளி பின்பற்றி வந்து செல்ல கோயில் நிர்வாகத்தினர் அறிவுறுத்தி உள்ளனர்.