அவிநாசி: அவிநாசி அருகே நடுவச்சேரியில், நுாற்றாண்டு பழமையான கரிவரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. ஹிந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில், எவ்விதமான பராமரிப்பும் இன்றி காணப்படுகிறது.கோவில் அருகே உயரமாக வளர்ந்துள்ள மரங்களின் வேர், கோவிலின் உட்புற கூரையின் வெளியே தெரியும் அளவுக்கு வளர்ந்திருக்கிறது.இக்கோவில், சக்தி வாய்ந்தது. மழை பெய்யும் போது, கூரையிலிருந்து மழை நீர் ஒழுகி, கோவிலுக்குள் குளமாக தேங்கி நிற்கும். தண்ணீரையெல்லாம் அகற்றிய பின்னரே, பூஜை நடக்கும்.கோவிலை பராமரிக்க, அறநிலையத்துறையினர் கண்டுகொள்ள வில்லை. பக்தர்கள் இணைந்து கோவிலை புனரமைத்து கொள்ள அனுமதி கேட்டிருந்தோம். அதற்கும் அறநிலையத்துறையினர் அனுமதி வழங்கவில்லை, என பக்தர்கள் ஆதங்கப்படுகின்றனர். கோவில் செயல் அலுவலர் சந்திர மோகனிடம் கேட்ட போது, கரிவரதராஜ பெருமாள் கோவிலை புனரமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது, என்றார். மரங்களின் வேர், கோவிலின் உட்புறகூரையின் வெளியே தெரியும் அளவுக்கு வளர்ந்திருக்கிறது.